தோனிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் அவர் தான் - கணித்த முன்னாள் வீரர்!

Sumathi
in கிரிக்கெட்Report this article
தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தீப் தேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
தீப் தேஷ்குப்தா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வென்றுள்ளது. பேட்டிங்கில் கணிசமாக ரன்களைக் குவித்த போதிலும் பலவீனமான பந்துவீச்சு காரணமாக சென்னை அணியால் போராடியே வெல்ல முடிந்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு இம்முறையும் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கைகொடுத்தார். ஷிவம் துபே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு ஆகியோரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பால் சென்னை அணி 200 ரன்களைக் கடந்தது.
ருதுராஜ் கெய்குவாட்
அதன்பின், தோனி அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதன் மூலம் லக்னோவை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தீப் தேஷ்குப்தா
கடந்த 3 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்குவாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியுள்ளார். சென்னை அணியின் தத்துவங்கள் மற்றும் வடிவம், முறை அனைத்தும் ருதுராஜ்க்கு தெரியும். அடுத்த கேப்டன் தத்துவ ரீதியில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சென்னை அணி விரும்புகிறதே தவிர வேறு எந்த வழியையும் விரும்பவில்லை.
என்னை பொறுத்தவரை தத்துவ ரீதியில் ருதுராஜ் கெய்குவாட் ஏற்கனவே தகுதியடைந்துவிட்டார். அடுத்த ஐபிஎல் தொடரில் டோனியிடமிருந்து கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்குவாட் எடுத்துக்கொள்வார்' எனத் தெரிவித்துள்ளார்.