இது வீடா..?? இல்லை வனவிலங்கு பூங்காவா..?? நடுவீட்டில் குதிரையுடன் தோனி..!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையுமான தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தோனி, ஒரு பைக் காதலன் என்று கிரிக்கெட் பற்றி தெரியாதவர்களுக்கு கூட தெரியும், ஆனால் அவருக்கு விலங்கு என்றால் அவ்வளவு பிரியமாம் தோனி, அசைவ உணவை விரும்பி சாப்பிடக்கூடியவர் என்றாலும் விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.
தற்போது ஐ.பி.எல். தொடருக்கு முன் தன் சொகுசு வீட்டில் தோனி ஓய்வில் உள்ளார். அப்போது நடு வீட்டில் நாயுடன் விளையாடி பார்த்து இருப்போம், இல்லை பூணையுடன் விளையாடி பார்த்திருப்போம். ஆனால் தல தோனி வித்தியாசமாக குதிரையை நடு வீட்டில் வைத்து விளையாடியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே தோனி தனது வீட்டில் பஞ்சவர்ண கிளி, விதவிதமான நாய் வகைகளை வைத்துள்ளார். விலங்குகள் மட்டும் தோனி வளர்க்கவில்லை. விவசாயமும் அதிகளவில் செய்து வருகிறார்.
தனது விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பொருட்களை வெளிநாட்டுக்கு தோனி ஏற்றுமதி செய்து வருகிறார். தோனி கிரிக்கெட்டுக்கு பிறகு தாம் வாழ்நாளை எப்படி வாழ வேண்டும் என்பதை இப்போதே பட்டியல் போட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், குதிரையுடன் தோனி விட்டுவிடுவாரா இல்லை சிங்கம், புலி என்று வளர்க்க ஆரம்பித்துவிடுவாரா என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.