‘என்னால் முடியாது ...’ - ரசிகரிடம் தோனி குறித்து பேசிய இஷான் கிஷன்... - ஆச்சரியப்பட்ட நெட்டிசன்கள்..!
ரசிகரிடம் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் இளம் வீரர் இஷான் கிஷன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
சாதனைப் படைத்த இஷான் கிஷன்
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. நடைபெற்ற இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் இந்திய அணி சார்பாக களமிறங்கிய இஷான் கிஷன், ஆரம்பம் முதலே மாஸாக விளையாடினார். இப்போட்டியில் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து மாஸ் காட்டினார். இதனையடுத்து இவர் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
தரவரிசையில் முன்னேற்றம்
சமீபத்தில் ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. அப்பட்டியலில், இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் 117 இடங்கள் கிடுகிடுவென எகிறி 37-வது இடத்தை பிடித்தார்.
தோனி குறித்து பேசிய இஷான் கிஷன்
இந்நிலையில், ரஞ்சிப் போட்டியில் விளையாட வந்த இஷான் கிஷனிடம் ரசிகர் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டார். அப்போது, என் மொபைல் போன் பின் பகுதியில் கையெழுத்திடுமாறு அவர் கேட்டார்.
அப்போது, இஷான் கிஷன் போனை வாங்கி திருப்பி பார்த்தபோது, அதில் தோனியின் கையெழுத்து இருந்தது. உடனே ஷாக்கான இஷான் கிஷன், தோனி பாயின் கையெழுத்து உள்ளது. என்னால் அந்த இடத்தில் கையெழுத்து போட முடியாது. வேறு இடம் இருந்தால் கூறுங்கள் நான் கையெழுத்து போடுகிறேன். இப்படி செய்வதுதான் நான் அவருக்கு கொடுக்கும் மரியாதை என்று இஷான் கிஷன் கூறியிருக்கிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இஷான் கிஷனின் தன்னடக்கத்தை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
"Sorry I can't sign above @MSDhoni's Autograph" - Ishan Kishan ❤️pic.twitter.com/5b5yhuEC3X
— DHONI Era™ ? (@TheDhoniEra) December 20, 2022