முட்டாள் தனமாக கற்பனை செய்யாதீங்க - கடுப்பான இர்பான் பதான்
நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பிளே-ஆஃப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஒன்பதாவது முறையாக ஐபிஎல் பைனலில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்த போட்டி மேட்ச் பிக்ஸிங்காக இருக்குமோ? என ரசிகர்கள் சிலர் சந்தேகம் எழுப்புவதாக சொல்லியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.
அதோடு அப்படி சொல்பவர்களுக்கு தனது எதிர்ப்பையும் அவர் தெரிவித்துள்ளார். 'முன்னதாக மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட் செய்த போதும் சிலர் மேட்ச் பிக்ஸிங்காக இருக்குமோ என சொல்லி இருந்தனர்.
இப்போது சென்னை, டெல்லியை வீழ்த்தியதற்கும் அதே போல கற்பனை கலந்த முட்டாள்தனமான கருத்துகளை சிலர் பகிர்ந்து வருகின்றனர்.
மற்ற அணிகள் விளையாடி ஆட்டத்தில் வெற்றி பெறும் போது அதற்கு மதிப்பு கொடுங்கள். அவர்கள் எப்படி விளையாடி உள்ளார்கள் என்பதை கவனிக்கலாம்.
அதைவிடுத்து இது மாதிரியான முட்டாள்தனமான கற்பனைகள் எதற்கு?' என பதான் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
you may like this video