"நான் கேட்கும் வரை எனக்கு அறிவுரை கூற வேண்டாம்" பயிற்சியாளருக்கு நிபந்தனை போட்ட தோனி..!
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடைநீக்கம் செய்யப்பட்டது. அப்போது சென்னை அணியின் கேப்டன் தோனி ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கா விளையாடினார்.
அப்போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த விளையாட்டு தரவு ஆய்வாளர் பிரசன்னா அகோரம்,தோனியுடனான முதல் சந்திப்பு குறித்து பேசியுள்ளார்.
ஐபிஎல் 2016-ல் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக மகேந்திர சிங் டோனியுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தபோது, நாங்கள் சந்தித்த முதல் நாளே, அவர் என்னிடம் 'வாங்க, அரட்டையடிக்கலாம்' என்று கூறினார்.
"நாங்கள் புனே ஸ்டேடியத்தில் இருந்தோம், அவர் என்னிடம் ஃபில்டர் காபி தரவா என்று கேட்டார். ஆம் என்று நான் பதிலளித்தேன்.
அவர் அங்கிருந்தவர்களை அழைத்து ஃபில்டர் காபி கொண்டு வர சொன்னார். அதன் பின்னர் என்னுடன் அரட்டையை தொடர்ந்தார்.
அப்போது டோனி என்னிடம், இந்த துறையில் உங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது என்று எனக்கு தெரியும். உங்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
எல்லா தகவல்களையும் உத்திகளையும் பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு கொடுங்கள். பயிற்சியாளருடன் சேர்ந்து வீரர்களுடன் உத்திகளுக்கான சந்திப்புகளை நடத்துங்கள். ஆனால் நான் அங்கு இருப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
நான் உங்களிடம் கேட்கும் வரை எனக்கு எந்த அறிவுரையும் கூற வேண்டாம். ஆனால் பயிற்சியாளர் மற்றும் வீரர்களுடனான உங்கள் அனைத்து மின்னஞ்சல் தகவல்களையும் எனக்கு அனுப்ப மறக்க வேண்டாம் என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.