இது தான் தோனியின் கடைசி ஐ.பி.எல் போட்டியா? - கவலையில் ரசிகர்கள்
ஐ.பி.எல் போட்டியின் 15-வது சீசன் வரும் மார்ச் இறுதியில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.இதற்கான ஏலம் அடுத்த மாதம் பெங்களூருவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசனையில் ஐபிஎல் நிர்வாகம் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளை மும்பையில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் உள்ள 3 கிரிக்கெட் மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தன்னுடைய கடைசி போட்டி சென்னையில் தான் இருக்கும் என பல முறை தெரிவித்திருந்தார்.
தோனி கடந்த ஐபிஎல் போட்டிகளில் பழைய மாதிரி விளையாடவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து இந்த ஆண்டு தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் பிசிசிஐ போட்டிகளை மும்பையில் நடத்தினால் தோனியின் ஆசை நிறைவேறாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னை ரசிகர்களுக்கும் தோனியை பார்க்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் அவரது ரசிகர்கள் பலரும் சென்னையில் போட்டி நடைபெறும் போது தான் தோனி ஓய்வு பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்காக சேப்பாக்கம் மைதானம் புதிய கேலரிகள் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.
ஒரு வேலை கட்டுமான பணிகள் முடியவில்லை என்றால், குறைவான பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.