என்னை புகழாதீங்க நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை - ரசிகர்களுக்கு தோனி வேண்டுகோள்

MS Dhoni CSK IPL 2021 WIN
By Thahir Oct 11, 2021 05:58 AM GMT
Report

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தல ரசிகர்கள் தோனியிடமிருந்து ஒரு அருமையான கடைசி ஓவர் பினிஷிங்கை நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராகப் பார்த்துள்ளனர்.

வெற்றியை நீண்ட காலம் பிறகு தோனியின் இன்னிங்ஸ் ஒன்று உறுதி செய்தது. டெல்லி கேப்பிடல்ஸ் உத்திகளில் ஏகப்பட்ட கேள்விகள் ஒரு புறம் இருந்தாலும் தோனி இன்னும் தன்னிடம் பேட்டிங் மீதமிருப்பதை காட்டினார்.

அதற்காக தி கிங் இஸ் பேக், என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஷார்ட் பிட்ச் பவுலிங், டாம் கரன் திடீரென கடைசி ஓவரில் ஏன் ஓடி வந்து தேங்காய் உடைத்தார் என்பதும் கேள்வியே. ருதுராஜ், ராபின் உத்தப்பா கூட்டணிதான் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

கடைசி ஓவரில் டாம் கரனின் ஷார்ட் பிட்ச் உத்தியை தோனி நன்றாகப் பயன்படுத்தி இடி போன்ற பவுண்டரி ஷாட்களில் வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றி குறித்து தோனி கூறியது:

என்னை புகழாதீங்க நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை - ரசிகர்களுக்கு தோனி வேண்டுகோள் | Ms Dhoni Ipl 2021 Csk Won

"என்னுடைய இன்னிங்ஸ் முக்கியமானது. டெல்லியிடம் நல்ல பவுலிங் அட்டாக் உள்ளது. அவர்கள் பிட்ச் உள்ளிட்டவற்றை நன்றாகப் பயன்படுத்தினார்கள். எனவே எங்களுக்குக் கடினம் என்று நினைத்தோம். இந்தத் தொடரில் நான் பெரிதாக எதையும் செய்து விடவில்லை.

எனவே பந்தை பார்க்க வேண்டும், பவுலர் என்ன செய்கிறார் என்பதை கவனித்தேன். வலைப்பயிற்சிகளில் நான் நன்றாகவே பேட் செய்தேன்.

ஆனால் நான் நிறைய யோசிப்பதில்லை, ஏனெனில் ரொம்ப யோசித்தால் பேட்டிங்கில் திட்டங்களை குழப்பிக் கொள்வதில் போய் முடியும்.

ஷர்துல் டீசண்டாக பேட் செய்கிறார், தீபக் சாகரும்தான். மற்ற டாப் ஆர்டர் பேட்டர்களைப் போல் அல்லாமல் ஷர்துல், சாகருக்கு முதல் பந்திலிருந்தே ஷாட்களை ஆட அனுமதியுண்டு.

ராபின் உத்தப்பா டாப் ஆர்டர் பேட்டிங்கை எஞ்ஜாய் செய்கிறார். ஆனால் நம்பர் 3-ல் மொயின் அலி எக்செலண்ட்.

இருவரில் ஒருவர் 3ம் நிலையில் இறங்குமாறு சூழ்நிலை ஏற்படுத்தினோம். நானும் ருதுராஜும் எப்போது பேசினாலும் அது ஒரு எளிமையான பேச்சாகவே இருக்கும்.

அவர் என்ன யோசிக்கிறார் என்பதை அறிய முயற்சி செய்வோம். அவர் எப்படி முன்னேறியிருக்கிறார் என்பதை பார்க்க நன்றாக இருக்கிறது.

20 ஓவர் ஆட எப்போதும் சித்தமாக இருக்கிறார். கடந்த முறைதான் முதல் முறையாக பிளே ஆஃப் தகுதி பெறாமல் போனோம்.

ஆனால் கடந்த சீசனில் கடைசி 3-4 போட்டிகளை நன்றாகப் பயன்படுத்தினோம். அதுதான் இந்த சீசனில் பெற்ற வெற்றிகளுக்குக் காரணம்." என்றார் தோனி.