தோனி தான் முடிவெடுக்க வேண்டும் - முடிவுக்காக காத்திருக்கும் இந்திய நிர்வாகம்
இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா உலக கோப்பை தொடரில் பங்களிப்பதும் பங்களிக்காமல் போவதும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகர் மகேந்திர சிங் தோனியின் கையில் தான் உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலமுறை சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்காக பல முறை வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும் எளிதாக சசிக்சர் அடிக்ககுடிய கூடிய திறமை படைத்த ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக தற்போது முன்பு போல் சிறப்பாக செயல்பட முடியவில்லை,
முழுமையாக பந்துவீச்சில் இருந்து தவிர்த்துக் கொண்ட ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் மட்டும் தற்போது தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு, மிகப்பெரிய ஓய்வில் இருந்தார்.
அவருடைய உடல் நலம் முன்னேற கால அவகாசம் நிறைய தேவைப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. உடல்நிலை சரியான பின்னர் மீண்டும் ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான லிமிட்டட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற்று விளையாட தொடங்கினார்.
பேட்டிங்கில் அவர் பழையபடி விளையாட ஆரம்பித்தாலும், பந்துவீச்சில் இன்னும் அவர் முழுமையாக தயாராகவில்லை.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கூட அவர் தற்போது பேட்டிங் மட்டுமே விளையாடி வருகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் ஹர்திக் பாண்டியா வின் உடல்நலம் பழையபடி சீராக வருவதற்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவ குழுவால் ஹர்திக் பாண்டியா கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஹார்திக் பாண்டியாவை லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அல்லது பினிஷேராக விளையாடவைக்கலாமா என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் யோசித்து வருகிறது.
அப்படி ஒருவேளை ஹர்திக் பாண்டியாவை லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிரக்க வேண்டுமென்றால் அது தோனியின் வார்த்தையில் தான் உள்ளது என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய வீரர்கள் சிறப்பாக செயல்படாத பட்சத்தில் ஹர்திக் பாண்டியா நிச்சயம் இந்திய அணிக்கு மிகப் பெரும் உதவியாக லோயர் மிடில்ஆர்டர்களில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.