பிரபல நடிகருடன் இணைந்து கால்பந்து விளையாடிய தோனி..!

Ms dhoni Ranveer singh
By Petchi Avudaiappan Jul 27, 2021 08:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து ஆல் ஸ்டார்ஸ் கால்பந்தாட்ட பயிற்சியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மேற்கொண்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதே சமயம் ராணுவம் , விவசாயம் என அவர் தனது பாதையை விரிவுப்படுத்தி வரும் நிலையில் விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தோனிக்கு சிறு வயது முதலே கால்பந்தாட்டம் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பாக அவர் கால்பந்தாட்ட அணியில் கோல் கீப்பராக செயல்பட்டு வந்தவர் என்பது நாம் அறிந்த ஒன்று. நடிகர் ரன்வீர் சிங் பகிர்ந்துள்ள இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் தோனியின் தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ‘எனது டார்லிங்’, ‘எனது அண்ணனின் காலடியில் எப்போதும்’, ‘எனது ஹீரோ’ என கேப்ஷன்களை ரன்வீர் சிங் கொடுத்துள்ளார். இதன்மூலம் விரைவில் ஆல் ஸ்டார் கால்பந்தாட்டத்தில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.