ஆள் ஏரியாவிலும் தல தான் : சிக்ஸர் விளாசும் தோனி - புதிய வீடியோவால் ரசிகர்கள் குஷி

ipl2021 msdhoni Yellove WhistlePodu
By Irumporai Sep 18, 2021 01:35 PM GMT
Report

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 2ம் பகுதி ஆட்டங்கள் நாளை முதல் அமீரகத்தில் தொடங்கவுள்ளது, நாளை தொடங்க உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த சீசனின் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியுள்ள நிலையில் சிஎஸ்கே பதில் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஐ பி எல் போட்டிக்கு தோனி படு தீவிரமாக தயாராகி வருகிறார்.

அமீரகத்தில் சென்னை அணி கடந்த ஒரு மாதமாக பயிற்சி முகாமை நடத்தி வருகிறது. அங்கு தினமும் 3 முதல் 4 மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார். குறிப்பாக சிக்ஸர்களுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இதுகுறித்து சிஎஸ்கே அணி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், சிஎஸ்கே கேப்டன் தோனி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களை விளாசி வருகிறார்.

சிங்கிள்களை அடிக்காமல் பழைய ஃபார்மில் சிக்ஸர்களை விளாசி பறக்க விட்டுள்ளார்தோனி. ஆகவே இந்த சீசனில் மீதமுள்ள போட்டிகளில் நிச்சயம் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.எஸ்.கே அணி இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.