மேட்ச் வருது ட்ரெயினிங் எடு : ரிஷப் பண்ட்டிற்கு கீப்பிங் பயிற்சி கொடுத்த தல தோனி; வைரலாகும் வீடியோ!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய பயிற்சி போட்டிக்கு முன்னதாக ரிஷப் பண்டிற்கு தோனி பயிற்சி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இன்றைய பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி, பும்ராஹ் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.

இந்தநிலையில், இந்த போட்டி துவங்குவதற்கு முன்னதாக முன்னாள் வீரரான தோனி, ரிஷப் பண்டிற்கு மைதானத்திலேயே வைத்து சில பயிற்சிகள் வழங்கினார்.

ரிஷப் பண்ட் தோனியிடம் பயிற்சி எடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்