“இது வாத்தி ரெய்டு” - சென்னை வந்தார் ‘தல’ தோனி

chennai super kings ms dhoni சென்னை சூப்பர் கிங்ஸ்
By Petchi Avudaiappan Aug 10, 2021 07:30 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குடும்பத்துடன் சென்னை வந்துள்ளார்.

கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை- மும்பை அணிகள் மோதுகின்றன.

போட்டிக்கான தேதி நெருங்கி வருவதால் பிசிசிஐ, அணி நிர்வாகங்கள் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனிடையே ஆகஸ்ட் 14 அல்லது 15ம் தேதிகளில் சென்னை அணி அமீரகத்திற்கு புறப்படும் என சில தினங்களுக்கு முன் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை அணியில் இணையும் பொருட்டு கேப்டன் தோனி குடும்பத்துடன் சென்னை வந்துள்ளார். இருதினங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடும் சென்னை அணியினர், முதல் ஆளாக ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.