திருமண நாளில் மனைவிக்கு தோனி அளித்த பரிசு - வாயைப் பிளந்த ரசிகர்கள்

Ms Dhoni Shakshi dhoni Wedding anniversary
By Petchi Avudaiappan Jul 05, 2021 12:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

திருமண நாளில் தனது மனைவிக்கு காரை பரிசளித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அசத்தியுள்ளார்.

கிரிக்கெட் உலகின் நட்சத்திர தம்பதிகளாக கருதப்படும் தோனி - சாக்ஷி ஜோடி நேற்று தனது 11-வது திருமண நாளை கொண்டாடினர். இதனை முன்னிட்டு ரசிகர்களும், பிரபலங்களும் தோனிக்கு சமூக வலைதளங்களின் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். 


இந்நிலையில் கேப்டன் தோனி அவரது மனைவி சாக்ஷிக்கு அழகான விண்டேஜ் காரை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சாக்ஷி தனது ட்வீட்டர் பக்கத்தில் காரின் புகைப்படத்தை பதிவிட்டு, திருமண நாள் பரிசுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.