Monday, May 19, 2025

சென்னை அணி வேண்டாம் - தோனி எடுத்த அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

chennai super kings msdhoni
By Petchi Avudaiappan 4 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் தன்னை தக்கவைக்க வேண்டாம் என எம்.எஸ்.தோனி சென்னை அணி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் இணைவதோடு, மெகா ஐபிஎல் வீரர்கள் ஏலமும் நடைபெற உள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தில் அணியின் 3 முதல் 4 வீரர்களை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தில் விடப்படுவார்கள்.

2 புதிய அணிகள் வருவதால் ஏலத்தின் விதிமுறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். Right to match card முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கலாம் என அணிகள் குழப்பத்தில் உள்ளது. இதில் தோனியை கண்டிப்பாக தக்கவைப்போம் என சென்னை அணி மட்டும் தெளிவான முடிவை அறிவித்தது.

இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு அணி 4 வீரர்களை தக்கவைக்க விரும்பினால், முதன்மை வீரருக்கு ரூ.16 கோடி ஊதியமாக தரவேண்டும். 3 வீரர்களை தக்கவைத்தால் ரூ.15 கோடி தர வேண்டும். ஒன்று அல்லது 2 வீரர்களை தக்கவைத்தால் ரூ.14 கோடி ஊதியம் தர வேண்டும் எனவும் பிசிசிஐ கூறியுள்ளது. 

இந்நிலையில் அவ்வளவு அதிக தொகை கொடுத்து தன்னை தக்க வைக்க வேண்டாம் என தோனி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் அளித்துள்ள பேட்டியில், எம்.எஸ்.தோனி ஒரு நியாயமான மனிதர். அவர் எங்களிடம் அதிக தொகை கொடுத்து தன்னை தக்கவைக்க வேண்டாம். அது சிஎஸ்கேவுக்கு தான் நஷ்டம் எனக் கூறியதாக தெரிவித்துள்ளார். 

ஆனால் நாங்கள் தோனியை விடப்போவதில்லை. முன்பே கூறியபடி அவர் இலலாமல் சிஎஸ்கே இல்லை. தோனி தான் எங்களின் முதல் தேர்வு. எனினும் அணியில் தோனியை போன்றே நீண்ட காலம் இருக்கும் வேறு வீரர்களுக்கும் இதே சலுகையை கொடுக்க முடியாது எனவும் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.