படத்தில் நடிக்கும் எண்ணம் துளி கூட இல்லை - தோனி வெளிப்படை பேச்சு
பாலிவுட் படங்களில் நடிப்பது தனது நோக்கமல்ல என்றும் தனது கடைசி போட்டி, சென்னையில்தான் நடைபெறும் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில், சிறப்பான பேட்டிங்கை தோனி வெளிப்படுத்தவில்லை. டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணி தோல்வி அடைவதற்கு தோனியின் மெதுவான பேட்டிங் தான் காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதனால், சர்வதேச கிரிக்கெட் போட்டி யில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி, இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் ஆன்லைன் மூலமாக ரசிகர்களுடன் உரையாடிய தோனி, தனது ஓய்வு முடிவு குறித்து தெரிவித்துள்ளார்.
அதில், 'பாலிவுட் படங்களில் நடிப்பது எனக்கு நோக்கமல்ல. விளம்பர படங்களில் நடிப் பதை தொடர்வேன். அதில் நடிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
திரைப்படம் என்று வரும் போது, அதை கையாள்வது கடினம். கிரிக்கெட்டுடன் நெருக்கமாக இருக்கவே விரும்புகிறேன். என்னுடைய பிரிவு உபச்சார கிரிக்கெட் போட்டி, சென்னையில்தான் நடைபெறும்.
அப்போது ரசிகர்களையும் சந்திப்பேன்' என்று தோனி தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா காரணமாக துபாயில் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது.
அடுத்த வருட தொடர், இந்தியாவில் நடக்கும் என கூறப்படுகிறது. அப்போது சென்னையில் நடக்கும் போட்டியில் கலந்துகொண்டு தோனி ஓய்வு பெறுவார் எனத் தெரிகிறது.
அதனால், ஐபிஎல் தொடரில் இருந்து அவர் இப்போது ஓய்வு பெறப்போவதில்லை என்பதை தெளிவு படுத்தியுள்ளார்.