தமிழக ரசிகர்களை ஏமாற்றினாரா தோனி? - கிரிக்கெட் விஷயத்தில் எடுத்த முடிவால் அதிருப்தி
பயிற்சி மையம் குறித்த விஷயத்தில் தோனி எடுத்த முடிவு சென்னை ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ்.தோனி பெற்று தந்த வெற்றிகளையும், பெருமை மிக்க சாதனைகளையும் அவ்வளவு எளிதில் ரசிகர்களால் மறக்க முடியாது. அதேசமயம் தோனியின் பிறந்த ஊர் ராஞ்சியாக இருந்தாலும், ஐபிஎல் தொடர் மூலம் அவர் தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாகவே விளங்கியவர்.
சென்னை தான் தமது இரண்டாவது வீடு என்றே தோனி பலமுறை கூறியுள்ளார். தனது கடைசி ஐ.பி.எல். போட்டியும் சென்னையில் தான் விளையாடுவேன் என்றும் கூறினார். தோனி மீது தமிழக மக்களும், சென்னை மீது தோனியும் அளவற்ற அன்பு வைத்துள்ளது இந்த உலகம் அறிந்த ஒன்று.
ஆனால் அவர் செய்த சம்பவம் ஒன்று ரசிகர்களை சற்று அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. அதாவது தம் மீது அன்பு வைத்துள்ள சென்னை மக்களுக்கு தோனி குறைந்தபட்சம் கிரிக்கெட் ரீதியிலாவது எதாவது செய்வார் என எதிர்பார்த்த ரசிகர்களக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
தோனியின் நண்பரான மிஹிர் திவாகர், தோனியின் பெயரில் ஒரு கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார். இந்த அகாடமியின் மெண்டராக உள்ள தோனி, நேரடியாக எவ்வித நிர்வாக பொறுப்பிலும் இல்லை. ஆனால் தோனி இதில் கொஞ்சம் முதலீடு செய்துள்ளார். இந்த அகாடமி அகமதாபாத், கான்பூர், நொய்டா, டெல்லி, ராய்ப்பூர்,ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ளது.
இந்த நிலையில், தோனி கிரிக்கெட் அகாடமியின் 7வது கிளை பெங்களூருவில் தொடங்கப்பட உள்ளது. வரும் 15ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்த அகாடமியில், 5 பயிற்சி ஆடுகளம், மைதானத்தின் நடுவில் 5 ஆடுகளம், 70 மீட்டர் சுற்றளவை கொண்ட மைதானம் என பல்வேறு வசதிகள் உள்ளன. தோனியின் கிரிக்கெட் யுத்தியை வைத்து இங்கு பயிற்சி திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள இந்த அகாடமி இதுவரை சென்னையில் இல்லாதது தமிழக ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது. தோனியின் மேற்பார்வையில் இயங்கும் இந்த அகாடமிசென்னையில் தொடங்கப்பட்டால் அது தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக இருக்கும்,ஆனால் தோனி ஏன் அதை செய்யவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கருப்பு கொண்டைக்கடலை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இந்த நோய் சரியாகும்- யாரெல்லாம் சாப்பிடலாம்? Manithan

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்: இந்த சிம்பு பட பாடல் தானாம்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்! Manithan
