“தமிழர்கள் பச்சை தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர் ” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

MS Dhoni CM MK Stalin Congrats
By Thahir Nov 20, 2021 02:10 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாராட்டு விழா கலைவானர் அரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கலகல பேச்சால் அரங்கை அதிர வைத்தார்.விழா மேடையில் பேசிய அவர்,நான் முதலமைச்சராக இங்கு வரவில்லை தோனியின் ரசிகராக இங்கு வந்துள்ளேன்.நான் மட்டும் இங்கு வரவில்லை என் பேரன் பேத்தி எல்லாம் வந்திருக்காங்க என்றார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் தோனியின் ரசிகர் தான், அதனால்  மகிழ்ச்சியோடும்,பெருமையோடும்,பூரிப்போடும் வந்திருக்கிறேன்.

“தமிழர்கள் பச்சை தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர் ” -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு | Ms Dhoni Congratulations Mk Stalin

சென்னை என்றாலே சூப்பர் தான்,மீண்டும் அது ஒரு முறை நிருப்பிக்கப்பட்டுள்ளது.அதற்காக இந்த பாராட்டு விழா நடந்து வருகிறது.

நான் இந்த விழாவில் கலந்து கொண்டு இருந்தாலும் என்னுடைய மனசு இப்போ கடந்த 10 நாட்களாக பெய்து கொண்டிருக்கிற மழையை பற்றி தான் நினைத்து கொண்டு இருக்கிறேன்.

வெள்ளம் எங்கு பார்த்தாலும் ஓடி கொண்டு இருக்கிறது.அதற்கு உண்டான நிவாரண பணிகளை எப்படி நடத்தனும் என்பதை தான் சிந்தித்து கொண்டு இருக்கிறேன்.

இப்படிபட்ட நெருக்கடியான நேரத்தில்,சிறிது நேரம் கொஞ்சம் இளைபாறலாம் என்று எண்ணி கொண்டிருந்த நேரத்தில் தான் இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கிறேன். 

“தமிழர்கள் பச்சை தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர் ” -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு | Ms Dhoni Congratulations Mk Stalin

கோட்டையில் இருந்தாலும் குடிசையை பற்றி நினைத்தப்படியே இருக்கணும் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.அத்தகைய எண்ணத்தில் தான் இந்த மேடையில் நின்று கொண்டிருக்கிறேன்.

நானும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் தான்,சென்னையில் மேயராக இருந்த போது காட்சி போட்டிகளில் விளையாடிது மட்டுமில்லாமல் போட்டியை நடத்தியருப்பதாக பேசினார்.

தான் சென்னை மேயராக இருந்த போது கபில் தேவ் உடன் விளையாட கூடிய வாய்ப்பு கிடைத்தாக கூறினார்.கபில் தேவுக்கு பின்பு உலக கோப்பை பெற்று தந்தவர் தான் தோனி.

தோனி அவருடைய சொந்த மாநிலம் ஜார்க்கண்ட்.ஆனால் இப்போது சென்னை காரராக ஆகிவிட்டார்.தமிழ்நாட்டு ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார்.

தமிழர்கள் பச்சை தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர்.தமிழருக்கெல்லாம் பிடிக்கும் போது நம்ம தலைவர் அவர்களுக்கும் பிடிக்காம இருக்குமா?

எத்தனை பரபரப்பு இருந்தாலும் எத்தனை நெருக்கடி இருந்தாலும் தலைவர் அவர்களும்,தோனி அவர்களும் கூலாக இருப்பார்கள்.

 தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எழுந்திருக்கிறது.அது தான் மிக மிக முக்கியமானவை.அவர் அடித்த ஸ்டைலான ஹெலிகாப்டர் சாட் மறக்கவே முடியாது.

“தமிழர்கள் பச்சை தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர் ” -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு | Ms Dhoni Congratulations Mk Stalin

அவருக்கொன தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டிருக்க கூடியவர்,இந்தியாவில் டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் என்றால் தோனி தான் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

இந்தியாவின் சிறிய நகரில் இருந்து உச்சத்தை தொட்டதால் தான் அவரை தமிழர் தங்களில் ஒருவராக வைத்துள்ளனர்.கலைஞரும் தோனி மீது தனி அன்பு கொண்டிருந்தார்.

சிறந்த கேப்டன் ஷிப்கான அடையாளம் தோனி என்று பாராட்டினார்.நீங்கள் உங்கள் விளையாட்டை தொடருங்கள் நாங்கள் எங்கள் மக்கள் பணியை தொடங்குகிறோம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.