தடை அதை உடை.. புது சரித்திரம் படை.. நாளை நமதே - சாதனை படைத்த தல தோனி
டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சிஎஸ்கே அணியின் தோனி இமாலய சாதனைப் படைத்துள்ளார் .
2021 ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் சென்னை அணியின் கேப்டன் தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.
இதுவரை டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து 41 வெற்றிகளை கொடுத்துள்ளார் .அதோடு கேப்டனாக பொறுப்பேற்ற ஆரம்பக்கட்டத்திலேயே 2007-ல் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார் .
இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த டேரன் சமி டி20 போட்டியில் 208 போட்டியில் கேப்டனாக செயல்பட்டு 2-வது இடத்தில் உள்ளார் .
இதைத்தொடர்ந்து விராட் கோலி 170 போட்டியிலும், கௌதம் கம்பீர் 153 போட்டியிலும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
