சிஎஸ்கே வெற்றி பெற்றதை கண்டு கண்ணீர் விட்ட சிறுமி - பரிசு கொடுத்து தேற்றிய தோனி
தோனியின் வெறித்தனமான ஆட்டத்தை நேரில் பார்த்த மகிழ்சியில் கண்ணீர் விட்ட சிறுமிக்கு தல தோனி தனது ஆட்டோகிராப் போட்ட பந்தை பரிசாக கொடுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான முதல் குவாலிபயர் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கீங்ஸ் அணிக்கு டூபிளசிஸ் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
இதனையடுத்து ருதுராஜ்,உத்தப்பா சிறப்பாக விளையாடினர்.19 ஓவரில் அவுட்டான ருதுராஜ் வெளியேறினார்.
இதன் பின் களம் இறங்கிய தோனி அதிரடி ஆட்டத்தால் அணியை வெற்றி பெற வைத்தார். இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல மிரட்டல் வெற்றிகள் பெற்றிருந்திருந்தாலும்,
தோனி ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாமல் தவித்து வந்த சென்னை ரசிகர்களுக்கு ஒரு குறையாகவே இருந்தது, ஆனால் அந்த குறையையும் தோனி இந்த போட்டியின் மூலம் தீர்த்து வைத்தார்.
இதனால் மைதானத்தில் இருந்த பெரும்பாலான ரசிகர்கள் தங்களது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்,
இதில் ஒரு சிறுமி தனது தாயை அரவணைத்து கொண்டு தேம்பி தேம்பி அழுத வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதயைடுத்து தோனி அந்த சிறுமிக்கு கையொப்பமிட்ட பந்தை பரிசாக அளித்து உற்சாகப்படுத்தினார்.இந்த வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.
Sweetest Gesture by Mahi, gave signed ball to the kids who was emotional over #CSK win ? #Dhoni pic.twitter.com/bGja3Cg83P
— Ash MSDian™ ?? (@savagehearttt) October 11, 2021

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
