மனைவி சாக்ஷி கர்ப்பம்? தோனி மகிழ்ச்சி
தல எம்.எஸ். தோனியின் மனைவி சாக்ஷி கர்ப்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
துபாயில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை 4-வது முறையாகக் கைப்பற்றியது.
போட்டியின் முடிவில் தோனியின் மனைவி சாக்ஷி, மகள் ஸிவாவுடன் மைதானத்துக்குள் வந்து தோனியுடனும் இதர கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினருடனும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி கர்ப்பமாக உள்ளதாகவும் 2022-ல் குழந்தை பிறக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூகவலைத்தளங்களில் பலரும் இச்செய்தியைப் பகிர்ந்து வருகிறார்கள். எனினும் தோனி தரப்பிலிருந்து இத்தகவல் பற்றி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
2010-ல் சாக்ஷியைத் திருமணம் செய்துகொண்டார் தோனி. இத்தம்பதியருக்கு 2015-ல் ஸிவா என்கிற மகள் பிறந்தார்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
