ஐபிஎல் 2021 சாம்பியன் பட்டத்தை சென்னை அணி தான் வெல்லும் - வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

MS Dhoni IPL 2021 Chennai Super Kings
By Thahir Oct 14, 2021 02:10 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெறும் என முன்னாள் வீரர் டேல் ஸ்டைன் ஆரூடம் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியால் ப்ளே ஆஃபிற்கு தகுதி பெற்று அசத்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணிக்கு எதிரான முதல் குவாலிபயர் போட்டியிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2021 சாம்பியன் பட்டத்தை சென்னை அணி தான் வெல்லும் - வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி | Ms Dhoni Chennai Super Kings Ipl2021

அதே போல், இந்த தொடரின் முதல் பாதியில் மிக மோசமாக விளையாடி புள்ளி பட்டியலில் கிட்டத்தட்ட கடைசி இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,

துபாயில் நடைபெற்று வரும் இரண்டாம் பாதியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல், இரண்டாவது குவாலிபயர் போட்டியில் டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி நாளை (அக்.,15) நடைபெற உள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

கொல்கத்தா அணி இதுவரை 2 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று முறையும் வென்றுள்ளது. இரு அணியின் கேப்டனுமே தங்களது அணிக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்த நாயகர்கள் என்பதால் இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வெறித்தமாக காத்துள்ளது.

ரசிகர்களை போலவே இறுதி போட்டிக்காக காத்திருக்கும் முன்னாள் வீரர்கள் பலர், இந்த போட்டி குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துவதோடு, எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான இறுதி போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் தென் ஆப்ரிக்கா வீரரான டேல் ஸ்டைன், இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெறும் என ஆரூடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டேல் ஸ்டைன் பேசுகையில், 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிர்ஷ்டம் இறுத் போட்டியில் முடிவுக்கு வரும் என கருதுகிறேன்.

டெல்லி அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியிலேயே கொல்கத்தா அணி தோல்வியின் விளிம்பு வரை வந்துவிட்டது.

கொல்கத்தா அணியின் சீனியர் வீரர்களான இயன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது அந்த அணிக்கு நிச்சயம் பின்னடைவை கொடுக்கும்' என்று தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து ஸ்டைன் பேசுகையில், 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியான பாதையில் பயனித்து வருவதால் எதைபற்றியும் கவலை கொள்ளாமல் அமைதியாக உள்ளது.

தோனியும் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்பிவிட்டார், கேப்டன்சியிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே போல் அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

கொல்கத்தா அணி அவர்களை விட அனைத்து வகையிலும் அசுரபலம் கொண்ட ஒரு அணியை தான் இறுதி போட்டியில் எதிர்கொள்ள உள்ளதாக நான் கருதுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.