சென்னை அணியில் இரண்டு வீரர்கள் நீக்கம் - தோனி அதிரடி முடிவு
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத உள்ளன.
மொத்தம் 60 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 49 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. லீக் போட்டிகள் அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் , டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
நான்காவது இடத்தை பிடிக்க மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் தீவிரமாக போராடி வருகிறது.
இந்தநிலையில் இன்று நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத உள்ளன.
புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் இடையேயான இந்த போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
அதே போல் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி முதலிடத்தை உறுதி செய்யும் என்பதால் இரு அணிகள் இடையேயான இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய சாம் கர்ரான் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் டூவைன் பிராவோ அணியில் சேர்க்கப்படுவார் என தெரிகிறது.
அதே போல் முகமது ஆசிப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீபக் சாஹர் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என தெரிகிறது.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்; டூபிளசிஸ், ருத்துராஜ் கெய்க்வாட், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, தோனி, ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஜாஸ் ஹசில்வுட்.