‘’மைடியர் தல உங்களுக்கு இன்னும் வயசாகல’’ - வைரலாகும் தோனி பிடித்த கேட்ச்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அந்த அணியின் பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி, தோனியின் தலைக்கு மேல் பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயற்சித்தார்.
இது சாம் வீசிய நான்காவது ஓவரில் பந்து வீசிய சாம்.திரிபாதியின் பேட்டில் பட்டு நொடி பொழுதில் விக்கெட் கீப்பர் தோனி அதை தனது உள்ளங்கைக்குள் லாவகமாக பிடித்து அசத்தினார்.
That Catch....?? But No ball...??#CSKvsKKR #Msdhoni pic.twitter.com/CXkXIFPF5q
— Chennai Super Kings?? (@ms_dhoni_077) September 26, 2021
அவரது அற்புதமான கேட்சை பார்த்து சென்னை அணியின் சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இருந்தும் அது அந்த ஓவரில் இரண்டாவது பவுன்சர் என்பதால் நடுவர்கள் நாட்-அவுட் கொடுத்தனர்.
No matters it is out or not out,but what a grab by ms dhoni behind the wicket hence proving again age is only the number #CSKvsKKR #CSK #iplwin pic.twitter.com/OaxtnIpsMO
— Rishabh Pant (@rishabpantclub) September 26, 2021
ஆனாலும் தோனிக்கு தற்போது 40 வயதாகிறது. இருந்தும் அவரது இந்த அதிரடியான கேட்சை பார்த்து ரசிகர்கள் 'உங்களுக்கு இன்னும் வயசாகல தல என கொண்டாடி வருகின்றனர்