புதிய சாதனையை நிகழ்த்திய கேப்டன் தோனி - டி20 போட்டிகளில் முதலிடம்

MS Dhoni Chennai Super Kings TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan May 10, 2022 08:50 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டி20 போட்டிகளில் சூப்பரான சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

2022 ஆம் ஆண்டுக்கான 15வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.  பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் ஒரு சில போட்டிகளே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் வெற்றிபெறும் முனைப்பில் தீவிரமாக விளையாடி வருகிறது. 

இதனிடையே கடந்த மே 8 ஆம் தேதி சென்னை - டெல்லி அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோவ்மன் பவல் விக்கெட்டுக்குப் பிறகு ஷர்துல் தாக்கூர் விக்கெட்டை கேட்ச் பிடித்து  கைப்பற்றிய நிலையில், தோனி டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்துள்ளார்.

அதாவது உலக அளவில் டி20 போட்டிகளில் கேட்ச் பிடித்ததன் மூலம் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி தோனி முதலிடத்தில் உள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 போட்டியில் விக்கெட் கீப்பராக களமிறங்கிய முன்னாள் தோனி, இதுவரை 347 டி20 போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதேபோல் இந்திய அணி வீரரும், தற்போதைய ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரருமான தினேஷ் கார்த்திக் 299 டி20 போட்டிகளில் விளையாடி 182 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

3வது இடத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த கம்ரான் அக்மல்( 282 டி20 போட்டி -172 விக்கெட்டுகள்) உள்ளார். மேலும் ஐபிஎல் போட்டியில் மட்டும் தோனி 168 போட்டிகளில் 129 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதில் 39 ஸ்டெம்பிங்குகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.