Thursday, Jul 10, 2025

அது வேண்டாம்; பூண்டு ரசம் வேணும்; தமிழில் கேட்ட தோனி - வைரலாகும் பதிவு!

MS Dhoni
By Sumathi 2 years ago
Report

தோனி தமிழில் ஹோட்டலில் உணவு கேட்ட சுவாரஸ்ய சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் கேட்ட தோனி

சமையல் கலைஞர் சுரேஷ் பிள்ளை தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியுடன் சேர்ந்து எடுத்து செல்பியை பகிர்ந்து சில சுவாரஸ்ய நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளார். அதில், என்னை தனது அறைக்கு அழைத்தார் தோனி.

அது வேண்டாம்; பூண்டு ரசம் வேணும்; தமிழில் கேட்ட தோனி - வைரலாகும் பதிவு! | Ms Dhoni Asks Tamil To Chef Viral Post

லிப்ட்டுக்கு கூட காத்து இருக்காமல் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு மூன்றாவது மாடியில் இருந்த அவரது அறைக்கு ஓடினேன். அப்போது அறையில் இருந்த தோனி, ‛‛ஹாய் Chef! எப்படி இருக்கீங்க? சாப்பிட என்ன இருக்கிறது? என

வைரல் பதிவு

ஹிந்தி, தமிழ் கலந்த மொழியில் கேட்டார். இதையடுத்து அவருக்காக தயார் செய்யப்பட்ட கடல் உணவு வகைகளை பட்டியலிட்டேன். அப்போது, ‛‛என்னால் கடல் உணவு சாப்பிட முடியாது. அதில் எனக்கு அலர்ஜி உண்டு. சிக்கன் குழம்பும், சாதமும் கிடைக்குமா?

எனக்கு தொண்டை வலி இருப்பதால் காரமான ரசம் வேண்டும். பூண்டு ரசம் கிடைக்குமா? என தமிழில் கேட்டார். சுமார் 20 நிமிடங்களில் உணவுடன் திரும்பினேன். செட்டிநாடு சிக்கன், பாசுமதி அரிசி, அப்பளம், ரசம் ஆகியவை பரிமாறப்பட்டன.

மறுநாள் காலை, ஜிம்முக்கு செல்லும் வழியில், என்னை பார்த்து இரவு உணவு பிடித்திருந்ததாக கூறினார். நான் விண்வெளியில் பறப்பதை போல் உணர்ந்தேன். அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.