‘இந்திய அணியில் மீண்டும் தோனி’ - வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கேப்டன் தோனி இடம் பெற்றுள்ளார்.
இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதற்காக 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கௌரவப்படுத்தும் விதமாக டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தப் பிறகு ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வந்த தோனி மீண்டும் இந்திய அணிக்கு தனது பங்களிப்பை ஆற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.