சென்னை வந்தடைந்தார் தல தோனி - சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா

MS Dhoni Chennai Arrived Appreciation Ceremony
By Thahir Nov 20, 2021 10:17 AM GMT
Report

ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை பாராட்டு விழா நடைபெற உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டம் வென்றது.

நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. இதையடுத்து சென்னை அணிக்கு, விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில், இன்று மாலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் குடும்பங்கள் பங்கேற்கின்றன.

விழாவில் பங்கேற்க, ராஞ்சியில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை வந்தடைந்த மகேந்திர சிங் தோனி, அங்கிருந்து காரில் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.