நெறியாளரிடம் தோனி சென்ன டபுள் மீனிங் பதில் : வைரலாகும் வீடியோ

MS Dhoni Viral Video
By Irumporai 1 மாதம் முன்

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி திறமையான வீரர் என்று நம் அனைவருக்கும் தெரியும். திறமை என்றால் கிரிக்கெட்டில் மட்டுமல்ல  அவரிடம் ஏதாவது கேள்வி கேட்டால் உங்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு பதிலளிப்பார். 

தோனி

போட்டி முடிந்த பிறகு அவர் அளிக்கும் பதில்கள் எப்போதுமே நச் என்று இருக்கும் , நம்ம  தோனி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருக்கிறார். அதில் மந்திரா பேடி தோனியிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு தோனி அளித்த பதிலே தற்போது வைரல் ஆகி வருகிறது.

நெறியாளரிடம் தோனி சென்ன டபுள் மீனிங் பதில் : வைரலாகும் வீடியோ | Ms Dhoni Answer Mandirabedi Goes Viral

ஒரு  நிகழ்ச்சியில் தோனியிடம்  தொகுப்பாளராக இருக்கும் மந்திரா பேடி  தோனியிடம் உங்கள் வாழ்க்கையிலே உங்களுக்கு கிடைத்த சிறந்த பரிசு எது என்று மந் கேட்கிறார்.

டபுள் மீனிங் பதில்

அதற்கு தோனி பதில் அளிக்காமல் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது மந்திரா பேடி நான் வேண்டுமென்றால் உங்களுக்கு விடை தருகிறேன் அது உங்கள் மகள்தான் என முகத்தை லேசாக மறைத்து சைகையில் கூறுகின்றார்.

ஆனால் நம்ம தல தோனி மகள் என்பது பரிசு கிடையாது. அது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. பரிசு என்றால் மற்றொருவர் நமக்கு கொடுப்பது என்று வித்தியாசமாக பதில் அளித்தார்.


தோனியின் இந்த டபுள் மீனிங் பதிலில் இரட்டை அர்த்தத்தம் இருப்பதாக கூறி ரசிகர்கள் நகைச்சுவையாக பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் நம்ம தோனிக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.