தயவுமில்லாமல், காசுமில்லாமல், கனவுகளை திறமையால் வென்ற தல மஹியின் 41-வது பிறந்த நாள்!

MS Dhoni Cricket India Birthday
By Sumathi Jul 07, 2022 10:40 AM GMT
Report

கூல் என்ற வார்த்தையை கேட்டாலே நமக்கு நினைவுக்கு வருவது தல தான். 1998-ல் இருந்து கிரிக்கெட் உலகில் மகேந்திரசிங் தோனி என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது.

ms dhoni

பள்ளிப்பருவத்தில் பரிட்சைக்குப்பின்னர் ரயில் ஏறி க்ரெளண்டுக்கு சென்ற சிறுவன் ஒரு நாள் உலகக்கோப்பையை வென்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா?

டிக்கெட் பரிசோதகர், தல தோனியாக மாறிய கதையை இந்த கட்டுரை மூலம் அறியுங்கள்...

 மஹி கிரிக்கெட்டுக்கு வந்த கதை

1981, ஜூலை 7, ராஞ்சியில் தேவகி - பான் சிங் இணையருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சிறுவனாக இருந்தபோது பள்ளியில் இறகுப்பந்தாட்டம், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டு விளையாடி வந்தான்.

தயவுமில்லாமல், காசுமில்லாமல், கனவுகளை திறமையால் வென்ற தல மஹியின் 41-வது பிறந்த நாள்! | Ms Dhoni 41St Birthday Special

மாவட்ட மற்றும் கிளப் அளவிலான போட்டிகளில் போட்டியிட்டு கலந்துக்கொண்டு வெற்றிபெற்றான். கோல்கீப்பராக சிறந்திருந்த சிறுவனை கிரிக்கெட்டு விளையாடி முயற்சிக்குமாறு அந்த பள்ளியின் கால்பந்து பயிற்சியாளர் அவனை ஊக்குவித்தார்.

முன்ன பின்ன அந்த விளையாட்டை முயற்சித்து கூட பார்க்காத போதும், விக்கெட் கீப்பிங்கில் அவன் இயற்கையாகவே சிறந்தான். கிளப் போட்டிகளில் நன்றாக விளையாட தொடங்கினான்.

அப்போது முதல் ராஞ்சி மக்களால் அந்த சிறுவனின் பேரை சொல்லாமல் இருக்க முடியவில்லை. 10-ம் வகுப்பிற்கு பின்னர் கிரிக்கெட்டில் முழுவதுமாக கவனம் செலுத்தி பயிற்ச்சி எடுக்கத்தொடங்கினான்.

மகனின் ஆர்வத்தைப் பார்த்து பான் சிங் உடல் வலுவை அதிகரிக்க பல அறிவுரைகள் கூறுவாராம். ஆனால், உடற்பயிற்சி வகுப்புகளிடமிருந்து நைசாக தப்பி நண்பர்களோடு ஊர் சுற்ற கிளம்பி விடுவான்.

இப்படி இருந்த சிறுவன் 1998ஆம் ஆண்டில் பீகார் மாநில U-19 அணியில் இடம் பிடித்தான், அப்போது தான் மகேந்திரசிங் தோனி யார் என்று இந்த தேசம் அறியத்தொடங்கியது.

பின்னர் ரஞ்சி போட்டிகள் தொடங்கி சர்வதேச போட்டிகள் வரை ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.

டிக்கெட் பரிசோதகர் பணி

1999-ல் பீகார் அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்றார். அதில் சிறப்பாக விளையாடியதால் 2000-ம் ஆண்டு அவருக்கு முதல் தரக் கிரிக்கெட்டில் பணிபுரிய வாய்ப்புக்கிடைத்தது.

தயவுமில்லாமல், காசுமில்லாமல், கனவுகளை திறமையால் வென்ற தல மஹியின் 41-வது பிறந்த நாள்! | Ms Dhoni 41St Birthday Special

அந்த போட்டியில் தான் அவருக்கு முதல் சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் என்ன தான் சிறப்பாக விளையாடினாலும், அவருக்கு அதற்குப்பிறகு கிரிக்கெட்டைத் தொடர விதி வழிசெய்யவில்லை.

குடும்ப சூழ்நிலைக்காரணமாக அவர் வேலை தேட வேண்டியிருந்தது. இந்தியன் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் பணிக்குச் சென்றார். இதற்கெல்லாம் துவண்டு போகும் ஆளா அவர்.

“என் கட்டுப்பாட்டுக்கு அப்பாலான விஷயம் பற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை ” என்று ஒரு பேட்டியின் போதும் அவர் கூறியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு அந்த பணியில் இருந்துக்கொண்டே ரயில்வே அணியில் இணைந்து விளையாடத்தொடங்கினார்.

விளையாட்டு, வேலை இரண்டில் ஒன்றை கைவிட்டாக வேண்டும் என்ற சூழ்நிலையில் வந்து சிக்கினார். ‘கையில் கிடச்சது தொலஞ்சா, இன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும்’ என்ற தலைவர் பாடல் வரிகள் சொல்லுவது போலவே தலையின் வாழ்கையிலும் நடந்தது.

டிக்கெட் பரிசோதகர் வேலையை விட்டு விடுவதாக முடிவு எடுத்தார். அவரது குடும்பத்தினர் இதனால் வருத்தமடைந்தனர். அந்த முடிவுதான் அவரது வாழ்கையையே மாற்றியமைத்தது.

 இந்திய அணியில் இடம்

ரயில்வே அணியில் அவர் சிறப்பாக விளையாடியதால், சீக்கிரமே அவரது காதுகளுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது. இந்திய அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தயவுமில்லாமல், காசுமில்லாமல், கனவுகளை திறமையால் வென்ற தல மஹியின் 41-வது பிறந்த நாள்! | Ms Dhoni 41St Birthday Special

தொடக்கத்தில் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை, ஒரு ரன் கூட அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். பத்திரிக்கையாளர்கள், ரசிகர்கள் என பலரும் அவர்கள் பங்குக்கு ஒரு விமர்சனம் வைக்கத்தொடங்கினர்.

2005-ம் ஆண்டு அவரது முதல் சர்வதேச சதத்தை அந்த விமர்சனங்களுக்கு பதிலாக அளித்தார். அந்த சதம் மகேந்திரசிங் தோனியை உலகிற்கே அறிமுகப்படுத்தியது.

2006-ம் ஆண்டு முதல் ஆயிரம் ரன்களை 53.95 சராசரி விகிதத்தில் கடந்து அவரது வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்றார். அதிவிரைவாக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்று வரலாறு படைக்கத்தொடங்கினார் எம்.எஸ் தோனி.

  கேப்டன் தோனி

தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த அவரது திறமையை அலங்கரிக்க தலைமைப்பதவி அவரைத் தேடி வந்தது. 2007-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தலைமைத்தாங்கும் வாய்ப்பை பெற்றார்.

தயவுமில்லாமல், காசுமில்லாமல், கனவுகளை திறமையால் வென்ற தல மஹியின் 41-வது பிறந்த நாள்! | Ms Dhoni 41St Birthday Special

அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை கையில் ஏந்தியது. அதற்கு பின் அவரது தலைமையில் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி நடைப்போட்டது.

2009-ம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்தது. இந்த சாதனைகள் அனைத்தும் சாத்தியமானது தோனியின் தலைமையால் தான்.

இந்திய கிரிக்கெட்டு வரலாற்றில் முதல் முறையாக, 2010-ம் ஆண்டு ஆசியப் கோப்பை போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றது. இந்த வெற்றியினால் உலகளவில் தலைசிறந்த கேப்டன் ஆனார் தோனி.

 சாதனைகளின் நாயகன்

பலரின் கணிப்பை உண்மையாக்கி 2013-ம் ஆண்டில் உலகக் கோப்பையை இந்தியா வென்றது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த சிக்ஸரை யாரால் மறக்க முடியும். அதே ஆண்டு சாம்பியன்ஷிப் டிராபியையையும் வென்றுத்தந்தார்.

தயவுமில்லாமல், காசுமில்லாமல், கனவுகளை திறமையால் வென்ற தல மஹியின் 41-வது பிறந்த நாள்! | Ms Dhoni 41St Birthday Special

மூன்றுவிதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார். 27 வருடங்களாக லார்ட்ஸில் இந்தியா வெற்றிபெறாமல் இருந்தது.

அந்த தோல்விகளின் வரலாற்றை 2014-ம் ஆண்டு திருத்தி எழுதினார் தோனி. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றது.

இந்த வெற்றிக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். 2015-ம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு 100-வது வெற்றியை பெற்றுத்தந்தார். 2017-ம் ஆண்டில் 100-வது ஸ்டம்பிங் செய்து அசத்தினார். அதே ஆண்டு தலைமை பதவியிலிருந்து நீங்கினார்.

 தல தோனி

2007-ம் ஆண்டு உலக கோப்பை வெற்றிக்கு பின்னர் ஐபிஎல் போட்டிகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. 2008 முதல் இப்போது வரை ஐபிஎல் போட்டிகள் நடத்திவருகின்றன.

2008-ல் சென்னை சூப்பர் கிங்ஸின் ஜெர்ஸ்ஸி வெளியீட்டு விழாவில், பல சாதனைகள் படைத்தக் கேப்டன் தோனி, வெள்ளை நிற டீ-ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்துக் கொண்டு பங்கேற்றார்.

ஜெர்ஸ்ஸி வழங்கப்பட்டதிற்கு பின்னர், “நீங்கள் இங்கு இருக்கும் நேரம் முடிவடைவதற்கு முன்னர், உங்கள் ரசிகர்களிடம் தமிழில் பேசிவிடுவீர்கள்” என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கூறினார்.

அதற்கு “எனக்கு அது பற்றி தெரியாது, ஆனால் உங்களுக்கு நிறைய கோப்பைகளை பெற்றுத்தருவேன்” என்று ஆங்கிலத்தில் கூறினார். அதற்கு பின் சில மணித்துளிகள் அமைதிக்காத்து அனைவரது ஆர்வத்தையும் தூண்டிவிட்டு,

தமிழில் “ரொம்ப நன்றி” என்று கூறினார். அந்த நிகழ்ச்சியில் இருந்து தமிழ் ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்பட்டார். 14 வருடங்களாக தலையாக அவர் சிஎஸ்கே-வுடன் பயணித்து வருகிறார்.

  கூல் கேப்டன் தோனி

இத்தனை சாதனைகள் செய்த ஒருவர், ஸ்ட்ரிக்ட் ஆபிசராக இருப்பார் என்று நினைக்கலாம். ஆனால் தோனி அப்படிபட்டவர் இல்லை, விளையாட்டு மாதானத்தில் இவரை விட யாராலும் அமைதி காக்க முடியாது.

பேட்டிகளுக்கு வரும்போதெல்லாம் நக்கலாக பதில் சொல்லும் குணம் தோனிக்கு அதிகமாகவே உண்டு. எப்போதும் கூலாக இருக்கும் கேப்டன் கூல் அளித்த சில பேட்டிகளில் அவர் கூறியது :

அவர் சிங்கிளாக வாழ்ந்த காலத்தில் தந்த ஒரு பேட்டியில் “பத்திரிகையாளர்கள் என் ஸ்நேகிதிகளை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றி விடுகிறீர்கள் யாரவது ஒருவரை கொஞ்ச நாட்களுக்கு தொடருங்களேன்”.

இது மட்டுமில்லை, தோற்றது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் என்ன தவறு நடந்தது என்று கேட்ட போது, “அதனால்தான் சொல்கிறேன் ஆட்டத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று, பார்த்திருந்தால் என்ன தவறு என்பது உங்களுக்கே புரிந்திருக்கும்” என்று பதிலளித்தார்.

 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

பல போட்டிகளில் இந்தியாவை வெற்றிப்பெற செய்த தோனியும் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்தது. 2020 சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு அவர் ஓய்வு பெறும் செய்தியை தெரிவித்தார்.

அந்த வீடியோவில் “சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறேன். இந்த ஓய்வு அறிவிப்பு இன்றிரவு 7:29 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது. என் மீது அளவற்ற அன்பு வைத்துள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள்” என்று கூறினார்.

சென்னையை அவரது இரண்டாவது சொந்த ஊர் என்று பெருமையுடன் கூறுவார். அந்த வீடியோ பதிவை சென்னையில் இருந்தபடியே பதிவிட்டார். ஓய்வு அறிவித்தப்பின்னரும் அவர் சிஎஸ்கே-வுக்கு கேப்டனாக ஒரு கோப்பையை வென்றுத்தந்துள்ளார்.

ஓய்வுக்கு பின்னர் அவருக்கு விருப்பமான பைக்குகளுடனும், சொந்த நிலத்தில்விவசாயமும் பார்த்து வருகிறார்.

  41-வது பிறந்த நாள்

2005 முதல் 2020 வரை சர்வதேச கிரிக்கெட் உலகில் ஒரு சிறந்த வீரராக வளம்வந்தார் தோனி. 2013-ம் ஆண்டு முதல் அவர் அடிக்கும் கடைசி பந்து சிக்ஸர்களுக்கென தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.

கிரிக்கெட் விளையாட ரயிலில் பயணித்து, அதே ரயில்களில் டிக்கெட் பரிசோதகராக வலம் வந்து, இந்திய கிரிக்கெட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று ஓய்வுபெற்ற இந்த மாமனிதனுக்கு இன்று 41-வது பிறந்த நாள்.

வயசு ஆனாலும் ஸ்டைலும் அழகும் குறையாமல், தாடி மீசை எல்லாம் வைத்துக்கொண்டு சிங்கம் மாதிரி அவரது குடும்பத்தினருடன் கொண்டாடினார் தோனி. இன்றும், என்றும் இந்த கூல் கேப்டனை நாமும் கொண்டாடுவோம்.

- வ. சபரிதா