பழிவாங்கும் நடவடிக்கை: லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

Dmk Admk Mr vijayabaskar Dvac Raid
By Petchi Avudaiappan Jul 24, 2021 01:37 PM GMT
Report

தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள் உட்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிட்டத்தட்ட 14 மணி நேரம் சோதனை நடத்தி ரூ.25,56,000 பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றிய தகவல் வெளியானது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், எனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டினார். 

மேலும் சட்ட ரீதியாக நாங்கள் இதை அணுகுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன் முழு வீடியோவை காண: