திருமணமான அந்த நடிகர் தான் எனக்கு எல்லாமே - முதல் முறையாக போட்டுடைத்த மிருணாள் தாக்கூர்
இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையாக உள்ளார் மிருணாள் தாக்கூர்.
மிருணாள் தாக்கூர்
தமிழில் வெளியான "சீதா ராமம்" படம் பெரும் வரவேற்பை பெற்றது.அப்படத்தில் நடித்த நாயகி மிருணாள் தாக்கூர் ஒரே படத்தில் தமிழக ரசிகர்களை கொள்ளைகொண்டார். தமிழை தாண்டி இவர் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.
தெலுங்கில் அண்மையில் நானியுடன் மிருணாள் தாக்கூர் நடித்த "ஹாய் நான்னா" படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து அவர் தற்போது விஜய் தேவாரக்கொண்டாவுடன் "பேமிலி ஸ்டார்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்திற்காக பல நிகழ்ச்சிகளளில் மிருனாள் தாகூர் கலந்து கொண்டு வருகின்றார்.
அவர் தான்..
அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவர் நடிகர் ஒருவரை குறித்து பேசியது பெரும் வைரலாகியுள்ளது. அதாவது, உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மிருணாள் தாக்கூர் , துல்கர் சல்மான்தான் எனக்குப் பிடித்த நடிகர். சீதா ராமம் படத்தில் நடித்தபோது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அப்போது அவர்தான் எனக்கு ஊக்கமளித்தார்.
பல மொழிப் படங்களில் துல்கர் நடித்திருக்கிறார். அவர்தான் எனக்கு ஒரு முன்னுதாரணம். எனது வழிகாட்டி, நண்பர், பிடித்த நடிகர் எல்லாம் அவர்தான்" என்று கூறியிருக்கிறார்.