‘’ கொஞ்சம் நல்லா கை தட்டலாமே ‘’ அதிமுக அரசையும் சீண்டிய எம்ஆர்கே , நிறுத்திய அப்பாவு நடந்தது என்ன?

sugarcanefarmers mrkpaneerselvam
By Irumporai Mar 19, 2022 11:54 AM GMT
Report

கரும்பு விவசாயிகளுக்கான திட்டங்களை அறிவித்தபோது மேஜையை தட்டிய உறுப்பினர்களை "இதற்கு நீங்கள் நன்றாக தட்டலாம், எதிர்க்கட்சியும் தட்டலாம்" என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் நகைச்சுவையாக தெரிவித்தார்

தமிழ்நாடு சட்டப்பேரவை - வேளாண்மை பட்ஜெட் - 2022 - 23 தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை அமலானது. அதன் படி கடந்த ஆண்டு முதன் முறையாக தமிழக அரசு சார்பில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மூலம் கர்நாடகா, ஆந்திரா, ஆகிய இரு மாநிலங்களுக்கு பிறகு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 3-ஆவது மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. எம்ஆர்கே பன்னீர் செல்வம் அந்த வகையில் இன்றைய தினம் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.

‘’ கொஞ்சம் நல்லா கை தட்டலாமே ‘’ அதிமுக அரசையும் சீண்டிய எம்ஆர்கே , நிறுத்திய அப்பாவு நடந்தது என்ன? | Mrk Paneer Selvam Announces Agree Budjet

அவர் கூறுகையில் வேளாண் துறையில் சிறந்த உற்பத்தியை தரும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் பரிசளிக்கப்படும். சோயாபீன்ஸ் பயிரை அதிகரிக்க 1.20 கோடி செலவில் மத்திய அரசுடன் இணைந்து திட்டம் செயல்படுத்தப்படும். சிறுதானிய திருவிழா மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும். 

பண்டைய தமிழர்கள் கரும்பை கசக்கி சாறு பிழிந்து சர்க்கரையாக்கும் தொழில்நுட்பத்தைத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதை "கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்" என நாலடியார் நவில்கிறது.

கரும்பு கடித்தாலும் சுவை தருகிறது கரும்பு, காய்ச்சினாலும் வெல்லம் தருகிறது அதன் சாறு. தொழில் துறை வசமிருந்த சர்க்கரைத் துறை வேளாண் துறைக்கு மாற்றப்பட்டது.

உழவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இது என கூறிவிட்டு அமைச்சர் சிரிக்கிறார். கரும்பு உற்பத்தி, சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கரும்பு விலையை உயர்த்தி வழங்க கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்களின் கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் சென்ற ஆண்டை போலவே 2021- 2022 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக கரும்பு டன் ஒன்றிற்கு 195 ரூபாய் வழங்கப்படும்.

இந்த கோரிக்கையை முதல்வர் கருணையுடன் ஏற்றார். நல்லா தட்டலாம் ஏனெனில் கரும்பு விவசாயிகள் எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கடந்த நிதிநிலை அறிக்கையின் போது 150 ரூபாய் ஏற்றி கொடுத்தார்கள்.

இப்போது கூடுதலாக ஒரு 50 ரூபாய் ஏற்றிக் கொடுத்துள்ளார்கள். இதற்கு நல்லா தட்டலாம், எதிர்க்கட்சியே தட்டலாம்நிதிநிலை வாசிக்க சொன்ன சபாநாயகர் போன வாட்டி இதே அவையில் பணம் கேட்டு பணம் கேட்டு நாங்கள் 10 வருஷம் போராடினோம்.

10 வருஷம் போராடி  அப்போது எதிர்க்கட்சியினர் ஏதோ சொல்ல... அப்போது குறுக்கிட்டார் சபாநாயகர் அப்பாவு. "நிதி நிலை அறிக்கையை வாசித்து விடுங்க.." என்று அப்பாவு ஸ்ட்ரிக்டாக அமைச்சரிடம் தெரிவித்தார்

. அப்படியும் அமைச்சர், ஆக ஒரு வருஷத்தில் கரும்பு விலைக்கு ரூ 3 ஆயிரத்தை எட்டி பிடித்துவிட்டோம் என கூறினார். அதன்பிறகு, பட்ஜெட் வாசிப்பை தொடர்ந்தார்.