இம்ரான்கான் தலைமறைவு : கோடிக்கணக்கில் ஊழல் , செக்வைத்த அரசாங்கம் பதட்டத்தில் பாகிஸ்தான்

Pakistan Imran Khan
By Irumporai Mar 06, 2023 06:11 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்ரான்கான் தலைமறைவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது நம்ப்பிகை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவி விலகினார், அதே சமயம் இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருக்கும் போது 10 க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு தொடங்கி வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணம் பெற்றதாக இமரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின இதையடுத்து தேர்தல் ஆணைய அலுவலகம் முன் இம்ரான் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இம்ரான்கான் தலைமறைவு : கோடிக்கணக்கில் ஊழல் , செக்வைத்த அரசாங்கம் பதட்டத்தில் பாகிஸ்தான் | Mran Khan Evades Arrest Pakistan

மேலும் இமரான்கான் வளைகுடா நாடுகள் மூலம் 58 மில்லியன்கள் பெற்றதாக அவர் மீது வழக்கு உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை பிறப்பித்தது.

பாகிஸ்தானில் பரபரப்பு

இதையடுத்து இன்று கைது வாரண்டுடன் இம்ரான்கானை கைது செய்த இஸ்லாமாபாத் போலீசார் லாகூரில் உள்ள ஜமான் பார்க் இல்லத்திற்கு வந்தனர். ஆனால் அவர்கள் வந்தபோது இம்ரான்கான் வீட்டில் இல்லை. எனவே அவரை கைது செய்ய முடியவில்லை.

ஆகவே இம்ரான்கான் தலைமறைவாக இருப்பதாகவும் அவரது கைது நடவடிக்கையினை தடுக்க கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பாகிஸ்தானில் பரபரப்பு நிலவுகின்றது.

மேலும், இம்ரான் கானின் பேச்சுக்கள், பேட்டிகள் உள்ளிட்டவற்றை ஏற்கனவே பதிவு செய்ததாகவோ, நேரலையாகவோ ஒளிபரப்பக் கூடாது என்று தொலைக்காட்சிகளுக்கு மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது