எம்.ஆர்.விஜயபாஸ்கர் வங்கி லாக்கரை சோதனை செய்ய முடிவு! வலுக்கும் விசாரணை! என்ன நடக்கும்?

house it raid ex minister mr vijayabaskar related palce
By Anupriyamkumaresan Jul 23, 2021 06:04 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது சகோதரர் சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வங்கி லாக்கரை சோதனை செய்ய முடிவு! வலுக்கும் விசாரணை! என்ன நடக்கும்? | Mr Vijayabaskar House It Raid

இது தொடர்பாக நேற்று கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கரூரில் உள்ள விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் , அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் , அவருக்கு நெருங்கி தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் மொத்தம் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 14 மணி நேர சோதனையில் ரூ.25.56 லட்சம் பணம் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் , காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன .

இந்த நிலையில் இன்று அவரது வங்கி லாக்கரை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.