Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியின் முதல் Finalist ஜோடி இவங்க தான் - ரசிகர்கள் மகிழ்ச்சி
பிரபல விஜய் தொலைக்காட்சியில் தற்போது அனைவராலும் ரசிக்கப்பட்டு வரும் Mr. And Mrs.சின்னத்திரை நிகழ்ச்சியின் முதல் finalist அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் தற்போது அனைவராலும் ரசிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் Mr. And Mrs.சின்னத்திரை நிகழ்ச்சி. 12 ஜோடிகளுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக எலிமினேட் ஆன நிலையில், தற்போது 5 ஜோடிகள் உள்ளனர்.
இந்த டாப் 5 ஜோடிகளுக்கு இடையே தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே போட்டி கடுமையான முறையில் நடத்தப்பட்டது.
இதில் அனைவரையும் விட அதிக போட்டிகளை வென்று முதல் பைனலிஸ்ட் போட்டியாளர்களாக, ஜாக் மற்றும் ரோஷினி ஜோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதன்முலம் அவர்கள் தான் முதல் பைனலிஸ்ட் என தெரியவந்ததுள்ளது.
இதனை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து அடுத்த பைனலிஸ்டுக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.