விரைவில் டும் டும்; ராகுல் காந்திக்கு கல்யாணம் - சட்டென அவரே சொன்ன தகவல்!
திருமணம் குறித்த கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
ராகுல் காந்தி
உத்தரப் பிரதேசம், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது, இடைமறித்த கூட்டத்தினர், அவரின் திருமணம் குறித்து கிண்டல் செய்ததுடன், எப்போது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
திருமணம்?
அப்போது தனது இருக்கையில் எழுந்து மைக்கின் அருகே வந்த சகோதரி பிரியங்கா காந்தி, முதலில் மக்களின் கேள்விக்கு பதில் கொடு என்று கூறினார். உடனே, ராகுல் நான் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஐந்தாவது கட்டமாக ரேபரேலி தொகுதியில் மே இருபதாம் தேதி தேர்தல் நடக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அந்த தொகுதியில் 5,34,918 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ராகுல் காந்தி முதன்முறையாக ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.