திமுக உடனான கூட்டணி தேர்தலுக்கானது - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
திமுக அரசு வரக்கூடாது என்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளார்கள் எனவும் எங்கள் கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி மட்டும்தான் எனவும் காங். எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் அக்கட்சியின் எம்.பி.யுமான மாணிக்கம் தாக்ர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போதே இதைனை தெரிவித்துள்ளார்.

அப்போது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “எங்களைப் பொருத்தவரை இந்த கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. 2026 தேர்தல் முடிந்துவிட்டது.
அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரக் குழு நேற்றிரவு கலந்து ஆலோசித்தது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் தோல்விக்குப் பிறகு, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் (திமுக) காங்கிரஸ் தொடர்ந்து பயணிக்க வேண்டுமா என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
தேவைப்படும் நிலையில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு நேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஜூம் மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவை அதற்கான அறிவிப்பை தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரீஸ் சோடங்கர் அறிவிப்பு வெளியிடுவார்.
இந்த தேர்தலை பொருத்தவரை பாஜக தமிழகத்திற்குள் வரக்கூடாது என மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார்.
தமிழக முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவர் தோல்வி அடைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு திமுக முதலமைச்சர் தோல்வி என்பது வருத்தம் அளிக்கிறது. அது நடந்திருக்க கூடாது. அதேபோல காங்கிரஸ் தலைவர் தோல்வியும் நடந்திருக்கக்கூடாது. ராஜீவ் காந்தி உயிரிழந்த இடத்தில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழக மக்கள் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நிலையில் வாக்களித்துள்ளார்கள்.
மதவாத சக்திகள் உள்ளே நுழையக்கூடாது என்பதற்கான தேர்தல்தான் திருப்பரங்குன்றத்தில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றது தேர்தல் பிரச்சாரத்தில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏவாக இருந்த ராஜன் செல்லப்பா தீபம் ஏற்றுவோம் என கூறினார்.
ஆனால் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மதவாதத்துடன் விலை போனதால் தோல்வியுற்றார்.
காங்கிரஸ் கட்சி எங்கள் முதுகில் மட்டுமல்ல தமிழக மக்களின் முதுகிலும் குத்திவிட்டது என திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கூறியது குறித்த கேள்விக்கு சரவணன் புலம்பல். வன்மத்தின் அடிப்படையில் உருவானது என பதிலதித்துள்ளார்.