ஹெல்மெட் அணியாமல் நடந்து சென்ற நபர் - ரூ.300 அபராதம் விதித்த போலீஸ்

Uttar Pradesh
By Karthikraja Jan 10, 2025 02:30 PM GMT
Report

நடந்து சென்ற நபருக்கு ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதித்துள்ளனர்.

ஹெல்மெட்

போக்குவரத்து சட்டப்படி இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணிக்கும் போது கட்டாயம். ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிப்பர். 

police fine for helmet

ஆனால், மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து சென்ற நபர் ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரூ.300 அபராதம்

மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தில் உள்ள அஜய்கர் பகுதியை சேர்ந்தவர் சுஷில் குமார் சுக்லா. இவர் தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்கு வரும் விருந்தினர்களை அழைக்கச் சாலையோரமாக நின்று கொண்டு இருந்துள்ளார். 

madhya pradesh man fined for walking without helmet 

அப்போது அங்கு வந்த போலீஸ் வாகனம் ஒன்று அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி, அஜய்கர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். தனது மகளின் பிறந்த நாள் விழாவிற்கு செல்ல வேண்டும் என அவர் கூறியதையடுத்து அப்போது அருகில் இருந்த மோட்டார் வாகனத்தை இவர் ஹெல்மெட் இன்றி ஒட்டியதாக ரூ.300 அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பன்னா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் (SP) சுஷில் குமார் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.