திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யின் ரூ.29 கோடி சொத்துக்கள் முடக்கும் - ED அதிரடி!

All India Trinamool Congress Enforcement Directorate
By Swetha Apr 02, 2024 05:41 AM GMT
Report

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி கே.டி.சிங்கின் 29 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் எம்.பி

மக்களவை தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் அமலாக்கத்துறை பல அரசியல் கட்சி தலைவர்களின் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யின் ரூ.29 கோடி சொத்துக்கள் முடக்கும் - ED அதிரடி! | Mp Kd Singh Assets Of Rs 29 Crore Are Frozen

அந்த வகையில், தமிழகத்தில் செந்தில் பாலாஜி, டெல்லியில் மணிஷ் சிசோடியா, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் என பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியும், அல்கெமிஸ்ட் குழுமத்தின் தலைவருமாக கே.டி. சிங் மீது அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

கே.டி.சிங்கின் அல்கெமிஸ்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் அல்கெமிஸ்ட் டவுன்ஷிப் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மக்களிடமிருந்து ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

திகார் சிறையில் டெல்லி முதல்வர் - நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

திகார் சிறையில் டெல்லி முதல்வர் - நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சொத்துக்கள் முடக்கும்

மேலும், மக்களிடம் அதிக வருமானத்தை வழங்குவதாகவும், பொதுமக்களின் முதலீட்டுக்கு அதிக வட்டி விகிதம் தவிர கூடுதலாக வீட்டு மனைகள், வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் தருவதாக கூறி அந்நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யின் ரூ.29 கோடி சொத்துக்கள் முடக்கும் - ED அதிரடி! | Mp Kd Singh Assets Of Rs 29 Crore Are Frozen

இதனை கண்டறிந்த சிபிஐ, உத்தரப் பிரதேச காவல் துறை மற்றும் மேற்குவங்க காவல் துறை ஆகியவை அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, பணமோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை மேற்கொண்ட விசாரணையில் அல்கெமிஸ்ட் குழுமத்துக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

பீச்கிராஃப்ட் விமானம், மேலும் பல இடங்களில் அந்த குழுத்துக்கு சொந்தமாக உள்ள குடியிருப்புகள், சொத்துகள் ஆகியவை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.29.45 கோடி ஆகும்.