ஆளுநர் இல்லைனா ஆன்லைன் ரம்மியை ஒழிச்சிருப்போம் - கனிமொழி எம்பி
ஆளுநர் பதவி இல்லையென்றால், ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்கலாம் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி
தூத்துக்குடியில் உள்ள சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ”கவர்னர் பதவி காலாவதியானது.
அதை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அது இல்லை என்றால் ஆன்லைன் ரம்மியை என்றோ ஒழித்திருப்போம். கவர்னர் பதவி தேவையில்லாத ஒன்று. கவர்னர் இல்லை என்றால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும்.
கனிமொழி எம்பி
எதற்காக ஆன்லைன் ரம்மி தடையை பாதுகாக்க துடிக்கிறார்கள் என தெரியவில்லை” என்றார். முன்னதாக, ஆன்லைன் விளையாட்டு முறைப்படுத்துதல் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காத நிலையில்,
இதுதொடர்பாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட அவசர சட்டமும் காலாவதி ஆனது குறிப்பிடத்தக்கது.