வரலாற்றைத் திரிக்கும் முயற்சியில் இறங்கிய பாஜக..வன்மையாக கண்டிக்கிறேன் - கனிமொழி!
நியாய விலைக் கடைகளின் பெயரை மாற்றும் முயற்சியில் பாஜக அரசு இறங்கியுள்ளது என கனிமொழி சாடியுள்ளார்.
கனிமொழி
இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “மாநில மக்களின் பசிப்பிணிப் போக்க, நாட்டிலேயே முதல்முறையாக 1972ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை நிறுவி,
பொது விநியோக முறையை சமூக பரவலாக்கம் செய்தவர் நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி தலைவர் கலைஞர் அவர்கள்.இன்று இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பொது விநியோக முறையின் முன்மாதிரியே தமிழ்நாட்டின் நியாயவிலைக் கடைகள்தான்.
பாஜக..
ஆனால், இந்த திட்டங்களைத் தொடங்கியதில் துளியும் பங்கில்லாத ஒன்றிய பாஜக அரசோ, நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளின் பெயரை
‘ஜன் போஷான் கேந்த்ராஸ்’ என்று மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது வரலாற்றைத் திரிக்கும் முயற்சி. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.