ஏ.ஆர்.ரகுமான் விவகாரம்.., ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி பதிவு
இந்தி திரைப்படத் துறையில் தன்னிடம் பாகுபாடு இருப்பதாக ஏ.ஆர்.ரகுமான் அண்மையில் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
ஒரு பேட்டியில் பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளாக இந்தி திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்ததாக கூறினார்.
தற்போது இசைத்துறை இசைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் இருப்பதாகவும், படைப்பாற்றல் இல்லாதவர்கள் முடிவெடுப்பதால் பாகுபாடு உருவாகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், தனக்கு வாய்ப்புகள் கிடைக்காததற்கு மதரீதியான காரணங்களும் இருக்கலாம் என்றும், அது நேரடியாக எதிர்கொள்ளவில்லை என்றாலும் அதுபோன்ற விஷயங்களை கேள்விப்படுவதாகவும் கூறினார்.
இருப்பினும், தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் தான் திருப்தியாக இருப்பதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்தை பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்தார்.
I stand with @arrahman. The deliberate targeting of a musician whose art transcends religion, language, and identity, and the shocking silence of those in authority in India, is deeply disturbing. Rahman is a creator and artist who carried the music of this country to the world,…
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 20, 2026
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.