எடப்பாடி பழனிசாமியை ஏதோ ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக்கி அனுப்பிடுவாங்க- கனிமொழி
சட்டப்பேரவை தேர்தலின் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியைஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக்கி அனுப்பிவிடுவார்கள் என நாடாளுமன்ற திமுக குழுத்தலைவரும், கட்சியின் துணைச்செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
மதுரை விரகனூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் திமுக எம்.பி. கனிமொழி, திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் கிருத்திகாவுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

அதன் போது கனிமொழி மேலும் தெரிவிக்கையில்,பிஜேபியோடு கைகோர்த்த எத்தனையோ பேரின் நிலை என்னவென்று எமக்கு நன்றாக தெரியும்.
பீகாரில் எத்தனையோ முறை முதலமைச்சராக இருந்த நித்தீஷ் குமாரின் பதவி பறிக்கப்பட்டு ராஜ சபை உறுப்பினராக கொண்டுவரக்கூடிய ஒரு நிலை உருவாகியிருக்கின்றது.
சட்டப்பேரவை தேர்தலின் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக்கி அனுப்பிவிடுவார்கள்.
பாஜ-அதிமுக கூட்டணியின் வெறுப்பரசியலுக்கு இந்த மண்ணில் இடமில்லை என்றும், திமுக அரசின் சாதனைகளை மக்கள் அங்கீகரித்துள்ளார்கள்.
பெண்களுக்காக, இளைஞர்களுக்காக, விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுகாக தமிழ் நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்ல திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் என கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையானின் வதைமுகாமில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்! CID விசாரணையில் அம்பலம் IBC Tamil