அமைச்சரை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை : கனிமொழி எம்பி கண்டனம்

Smt M. K. Kanimozhi DMK
By Irumporai Jun 16, 2023 06:56 AM GMT
Report

அமைச்சரவையினை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை, இதய அறுவை சிகிச்சைக்கான நடைமுறைகளை குறிப்பிட்டு, அவர் பொறுப்பு வகித்து வந்த மின்சாரத்துறை மற்றும் டாஸ்மாக் ஆயத்தீர்வை துறையை வேறு அமைச்சர்களிடம் ஒப்படைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானித்து அதற்கான ஒப்புதல் பெற ஆளுநர் ரவியிடம் கோப்புகளை அனுப்பினார்.

அமைச்சரை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை : கனிமொழி எம்பி கண்டனம் | Mp Kanimozhi Condemned Governor Rn Ravi

  ஆளுநர் மதிக்க வேண்டும்

ஆனால் அதில் தவறுகள் இருக்கிறது. சிலவற்றை மாற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை திருப்பி அனுப்பிவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று உடனடியாக அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநர் அனுப்பிய கோப்புகளில் திருத்தும் மேற்கொண்டு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில், அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக இருக்கும் ரவி அவர்களுக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும்.’ என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.