கனிமொழிக்கு டெல்லியில் தலைவர் பதவி; உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி - பரபரப்பில் அறிவாலயம்!

Udhayanidhi Stalin Smt M. K. Kanimozhi Tamil nadu
By Sumathi Jun 10, 2024 03:35 AM GMT
Report

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்பிக்கள் கூட்டம்

திமுகவின் புதிய எம்பிக்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,

கனிமொழிக்கு டெல்லியில் தலைவர் பதவி; உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி - பரபரப்பில் அறிவாலயம்! | Mp Kanimozhi And Deputy Cm Post For Udhayanidhi

வருகிற ஜூன் 14ஆம் தேதி கோவையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, -40 தொகுதிகளிலும் வெற்றி விழா- ஸ்டாலினுக்கு பாராட்டு, மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா உள்ளிட்டவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வு குறித்த கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிகளின் மக்களவை குழு தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இங்கே பாஜக தான் ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாத்தியிருக்காங்க - முதல்வர் தாக்கு!

இங்கே பாஜக தான் ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாத்தியிருக்காங்க - முதல்வர் தாக்கு!

முக்கிய முடிவு  

இதுவரை அப்பதவியை வகித்து வந்த கட்சியின் பொருளாளர் டி ஆர் பாலு மீண்டும் தனக்கே வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் மக்களவை குழு தலைவராக தான் வர வேண்டும் என கனிமொழி விரும்புகிறார். டி. ஆர். பாலு நீண்ட நெடுங்காலமாக டெல்லி அரசியலில் கோலோச்சி விட்டார்.

dmk

தமிழக அமைச்சரவையில் அவரது மகன் டிஆர்பி ராஜா முக்கிய அமைச்சராக இருக்கிறார். எனவே கனிமொழிக்கே அதிக சாத்தியம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இந்நிலையில், கனிமொழி மத்திய அமைச்சர் பதவி ஏற்கும் அதே நேரம், இங்கே உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாம். என்று ஆலோசனையும் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.