திருவள்ளுவர்‌,திருக்குறளைப்‌ பற்றிய அடிப்படை புரிதல்‌ ஆளுநருக்கு இல்லை - எம்.பி. கனிமொழி!

Smt M. K. Kanimozhi Tamil nadu R. N. Ravi
By Jiyath Jan 16, 2024 09:58 AM GMT
Report

ஆளுநருக்கு திருவள்ளுவர் பற்றிய அடிப்படை புரிதல் இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்

எம்.பி. கனிமொழி 

தமிழக ஆளுநர் ஆர்.என்,ரவி மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர், திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தனர்.

திருவள்ளுவர்‌,திருக்குறளைப்‌ பற்றிய அடிப்படை புரிதல்‌ ஆளுநருக்கு இல்லை - எம்.பி. கனிமொழி! | Mp Kanimozhi About Governor Rn Ravi

இந்நிலையில், ஆளுநருக்கு திருவள்ளுவர் பற்றிய அடிப்படை புரிதல் இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது "திருவள்ளுவர்‌ மற்றும்‌ திருக்குறளைப்‌ பற்றிய அடிப்படை புரிதல்‌ ஆளுநருக்கு இல்லை.

திருவள்ளுவர்‌ ஒரு துறவி என யாருமே சொன்னது கிடையாது. அவருக்கு திருமணமாகி, மனைவி இருந்ததாக ஒரு கருத்து இருக்கிறது. இல்லறம்‌ குறித்து கவித்துவமாக திருவள்ளுவரைப்‌ போன்று யாரும்‌ எழுதியது கிடையாது.

விமர்சனம் 

திருவள்ளுவரைப்‌ படித்து புரிந்துகொண்டவர்கள்‌ அவரை துறவியாக பார்த்தது கிடையாது. திருக்குறளில்‌ எந்த மதத்தின்‌ அடையாளங்களும்‌ கிடையாது.

திருவள்ளுவர்‌,திருக்குறளைப்‌ பற்றிய அடிப்படை புரிதல்‌ ஆளுநருக்கு இல்லை - எம்.பி. கனிமொழி! | Mp Kanimozhi About Governor Rn Ravi

அதனால்‌. சனாதனத்தையோ, இந்துத்துவத்தையோ திருவள்ளுவர்‌ மீது நாம்‌ திணிக்க முடியாது. அடிப்படையில்‌ இதனை நாம்‌ புரிந்துகொள்ள வேண்டும்‌. மதங்களை கடந்து, மனிதநேயத்தை பேசுவது தான்‌ திருக்குறள்‌. இதனை ஆளுநர்‌ ரவி புரிந்துகொள்ள வேண்டும்‌.

மனிதநேயத்திற்கு ஒரு நிறம்‌ இருக்குமானால்‌ அதுதான்‌ திருவள்ளுவரின்‌ நிறம்‌. எனக்கு தெரிந்து திருவள்ளுவருக்குப்‌ பிறகு மனிதநேயத்தின்‌ அடையாளம்‌ பெரியார்‌. அதனால்‌ திருவள்ளுவருக்குக்‌ கருப்பு உடை வேண்டுமானால்‌ அணிவிக்கலாம்‌. வேறு உடை அணிவிக்க முடியாது” என்று தெரிவித்தார்‌.