'மதம் சார்ந்த விசயங்களை முன்னிறுத்தி பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சி செய்கிறது' - எம்.பி ஜோதிமணி

fuelprice mpjyothimani fuelhikeinindia
By Swetha Subash Apr 05, 2022 02:03 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு கொள்ளையை மறைக்கவே மதம் சார்ந்த விசயங்களை முன்னிறுத்தி பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சி செய்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

இந்த விலை உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி,

‘பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு கொள்ளையை மறைக்கவே ஹிஜாப்,அசைவஉணவு தடைபோன்ற மதம் சார்ந்த விசயங்களை முன்னிறுத்தி பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சிசெய்கிறது.

இதே மத, இனவாத அரசியல்தான் இலங்கை மக்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடச் செய்திருக்கிறது. அதுவே இங்கும் நடக்கும்’ என பதிவிட்டுள்ளார்.