செருப்பு வீச்சு..அராஜக, ஆபாச அரசியலை நடத்தும் பாஜக - கொந்தளித்த எம்.பி ஜோதிமணி
பாஜக அராஜக, ஆபாச அரசியலை முன்னெடுப்பதாக கரூர் எம்.பி ஜோதிமணி சாடியுள்ளார்.
எம்.பி ஜோதிமணி
கரூரில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் மற்றும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றின் விலைவாசி உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சத்யாகிரக நடைப்பயணம் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து தொடங்கிய நடைபயணம், வெங்கமேடு வழியாக ஏ ஒன் திரையரங்கம் வந்தபின், அங்கிருந்து மீண்டும் வெங்கமேடு காமராஜர் சிலை அருகில் முடிந்தது.
விலைவாசி உயர்வு
இந்த சத்தியாகிரக நடைபயணத்தில் எம்.பி ஜோதிமணி கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் சுப்ரமணியம்,
வடக்கு மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாநகராட்சி கவுன்சிலரமான ஸ்டீபன் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி, நிதி அமைச்சர் தியாகராஜன் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.
பாஜக அருவருக்கத்தக்க, அராஜக, ஆபாச, வன்முறை அரசியலை நடத்துகிறது.
மத்திய மோடி அரசு வீடு தோறும் மூவர்ண கொடி என்ற பெயரில் பொதுமக்களை சுரண்டி பிழைக்கிறது. பாஜகவின் தேசபக்தி, போலியான தேச பக்தி என தெரிவித்தார்.