எனது வேட்பாளரிடம் காசு இல்லை: MP ஜோதிமணி வாக்கு சேகரிப்பு
என்னிடமும் காசு இல்லை எனது வேட்பாளரிடம் காசு இல்லை காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜோதிமணி பேச்சால் பரபரப்பு.
கரூர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிலும் குறிப்பாக இளம் பட்டதாரி வேட்பாளரான கிருத்திகாவை ஆதரித்து இன்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பசுபதி பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பேசுகையில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பொருத்தவரை ஒழுங்கீனம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது .
காங்கிரஸ் கட்சியின் தலைமை உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் திமுக கூட்டணியில் சில வார்டுகளில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் போட்டியிடுகின்றனர்.
அதிலும் ,குறிப்பாக மாநகராட்சி 12 வது வார்டில் வேட்பாளர் கிருத்திகா என்ற இளம் பட்டதாரி போட்டியிடுகிறார்.
அவருக்கு இப்பகுதி பொதுமக்கள் கை சின்னத்தில் வாக்கு பதிவு செய்து இவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
அதேபோல் என்னிடம் எப்படி காசு இல்லையோ அதே போல் கீர்த்திகா அவரிடம் காசு இல்லை.
அதிமுகவுக்கு ஓட்டு போடுவதும் , நரேந்திர மோடிக்கு போடும் போட்டும் ஒன்றே. போன்ற பல கருத்துக்களை முன் வைத்துதேர்தல் பிரச்சாரத்தில் கரூர் மன்ற உறுப்பினர் ஜோதிமணி பேசினார்.
கரூர் மாநகராட்சி 12வது வார்டு பசுபதி பாளையம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் தலைவர் சின்னசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்