ஓட்டு முறைகேடு முயற்சியா..? வாக்குப்பெட்டியை திறந்த பாஜக..? வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

Indian National Congress Rahul Gandhi BJP Narendra Modi Madhya Pradesh
By Karthick Nov 28, 2023 05:50 AM GMT
Report

டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படுவதற்கு முன்னதாகவே பாலகாட் நிர்வாக அதிகாரிகள் தபால் வாக்குகளை திறந்துவிட்டதாக மத்திய பிரதேச காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

குற்றம்சாட்டும் காங்கிரஸ்..?

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்றது. பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த தேர்தலில், காங்கிரஸ் - பாஜக இருகட்சிகளும் வெற்றிபெற்றிட வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளன.

mp-cong-points-at-opening-of-postal-ballots

இந்நிலையில், பலகாட் மாவட்டத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பு திறக்கப்பட்டதைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் பரவி வருகிறது. இது குறித்து மத்தியபிரதேச காங்கிரஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேர்தலை களங்கப்படுத்திய பாலகாட் கலெக்டர்.

வைரல் வீடியோ

மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கிரிஷ் மிஸ்ரா, இன்று நவம்பர் 27ஆம் தேதி, வேட்பாளர்களுக்குத் தெரிவிக்காமல், ஸ்டிராங் ரூமைத் திறந்து, தபால் ஓட்டுப் பெட்டிகளைத் திறந்து வைத்தார். கடைசி மூச்சை எண்ணும் சிவராஜ் அரசும், ஆட்சியில் கண்மூடித்தனமான பக்தியில் மூழ்கியிருக்கும் ஆட்சியர்களும் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர்.

ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் விழிப்புடனும் இருக்க வேண்டும். பாஜகவின் படுதோல்வியால் விரக்தியடைந்துள்ள இந்த திருட்டு அரசும், சில அரசு தரகர்களும் வாக்குகளை திருட முயற்சிக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.